
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலாசோபாராவில் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் 14 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அமித் துபே (30) என்ற அந்த ஆசிரியர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இந்த குற்றம் நடந்துள்ளது.
மாணவியை பல்வேறு காரணங்களைக் காட்டி தனது வீட்டு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்று பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், அந்த ஆசிரியர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.