
மறைந்த நடிகர் போண்டா மணியின் உடலுக்கு நடிகர் பெஞ்சமின், முத்துக்காளை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். போண்டா மணியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அங்கு போண்டா மணியின் உடலைப் பார்த்து பெஞ்சமின் கதறி அழுதுள்ளார். அப்போது பேசிய அவர், வெளிநாடு போயி சிகிச்சை எடுப்பதற்காக மூன்று நாள் முன்புதான் பாஸ்போர்ட் எடுத்தான். இப்படி தனியா விட்டுவிட்டு போய்விட்டான் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். போண்டா மணியின் குடும்பத்திற்கு நடிகர்கள் யாரேனும் பண உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.