தனுசு ராசி அன்பர்களே,
இன்று உடல் ஆரோக்கியம் சீராகும். காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் பக்க பலமாக நடந்து கொள்வார்கள். நட்பால் பெருமைப்படும் நாள் என்று சொல்லலாம். திட்டமிட்டு செயல்களை எளிமையாக முடிப்பீர்கள். தொழில் சார்பாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருளை வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.
கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். சோதனைகளை சாதனையாக மாற்றுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பெண்கள் சுகபோக வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். உதாசீனப்படுத்தியவர்கள் நட்புக்கரம் நீட்டுவார்கள். நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெற முடியும். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். கல்வி மீது அக்கறை அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உள்ளது. இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: மூன்று ஏழு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்