தனுசு ராசி அன்பர்களே, இன்று மாறுபட்ட சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று பெரும் அனுபவங்கள் புதுமையாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிவிதமான வளர்ச்சி ஏற்படுத்திக் கொள்ள முடியும். சுயதொழில் தொடங்கப் போட்ட திட்டம் வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று வெளிவட்டார தொடர்புகளை விரிவு படுத்திக் கொள்வீர்கள்.

நண்பருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மாறும். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று போட்டிகள் பொறாமைகள் விலகி செல்லும். உத்தியோகஸ்தர்களுக்கு நிம்மதியான மனநிலை ஏற்படும். பெண்களுக்கு இன்று மனமகிழ்ச்சி கூடும். காரியங்களில் வெற்றி ஏற்படும். அடுத்தவர்களை கேலி, கிண்டல் பேச்சுக்கு உள்ளாக்க வேண்டாம். சுய கௌரவம் மேலோங்கும்.

இன்று மாணவர்கள் மிகவும் யோசித்து எந்த ஒரு முடிவும் எடுப்பீர்கள். நன்கு படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.நமுக்கிய முடிவுகளில் தெளிவு ஏற்படக் கூடும். குழப்புகளுக்கு எல்லாம் விடை கிடைக்கக் கூடும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்