தனுசு ராசி அன்பர்களே,
இ ன்று கண்டிப்பாக யோகங்கள் வந்து சேரும். சிந்திக்காமல் செய்த காரியத்தில் கூட வெற்றி பெறுவீர்கள்.இன்று இறைவனை சரண் அடைவீர்கள். ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். தொலைபேசி வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். திட்டமிட்ட பணிகளில் வெற்றி கிடைக்கும். அனைவருக்கும் நல்ல நண்பராக இருப்பீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.
இன்று பணி புரியும் இடத்தில் மேல் அதிகரிக்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படலாம். கவனமாக இருங்கள். கடன் பிரச்சினை ஓரளவுக்கு சரி கட்டுவீர்கள். அடுத்தவர்களின் பிரச்சினையும் சரி செய்வீர்கள். உயர்வான எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். பெண்கள் இன்று சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்க கற்றுக் கொள்வீர்கள்.
இன்று பெண்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். தன வரவு ஓரளவு தாராளமாக இருக்கும். மாணவர்கள் இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். விளையாட்டுத்தனம் அதிகமாக இருக்கும். படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 , 5 மற்றும் 9
அதிஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்