தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள படம் ராயன். இந்த திரைப்படம் கடந்த 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் தனுசுக்கு தம்பிகளாக காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷண் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்று திரைக்கு வந்த முதல் நாளே அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

இந்த திரைப்படத்தில் துர்கா கதாபாத்திரத்திற்கு கிடைத்த அங்கீகாரமும் அன்பும் மக்களால் தான் சாத்தியமானது என துஷாரா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ராயன் திரைப்படத்திற்கு கிடைத்த ஆதரவிற்கு மிகப்பெரிய நன்றிகள் எனவும் அரவணைக்கும் வார்த்தைகள் மனதிற்கு நெருக்கமாகவே நிலைத்திருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.