தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பாக்யஸ்ரீ. இவர் நடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளியான மிஸ்டர் பச்சன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.‌ அதன்பிறகு இளம் நடிகையான இவர் தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடித்து வருவதோடு அசத்தலாகவும் நடனமாடுகிறார். இதனால் குறுகிய காலத்திலேயே ஏராளமான ரசிகர்கள் பாக்கிய ஸ்ரீக்கு   குவிந்துள்ளனர். இந்நிலையில் மிஸ்டர் பச்சன் திரைப்படம் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் நிலையில் நடிகை பாக்கிய ஸ்ரீ அந்த படத்திற்காக தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார்.

சில முன்னணி நடிகைகள் கூட தெரியாத மொழிகளில் டப்பிங் பேச தயங்குவார்கள். குறிப்பாக நடிகை அனுஷ்கா மற்றும் நடிகை தமன்னா ஆகியோர்கள் கூட டப்பிங் பேச மாட்டார்கள். ஆனால் இவர்கள் செய்யாத விஷயத்தை துணிந்து நடிகை பாக்கிய ஸ்ரீ செய்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எந்த ஒரு நடிகைக்கும் வேறொரு மொழியில் அறிமுகப் படத்தில்  நடிக்கும் போது டப்பிங் பேசுவது சவாலாக இருக்கும் நிலையில் அதனை துணிச்சலாக ஏற்று நடிகை பாக்கிய ஸ்ரீ செய்வது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.