
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வருகிற 7-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 10 வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் திருப்பூர், திண்டுக்கல், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.