
தமிழகத்தில் 10 வீடுகளுக்கு குறைவாக உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை குறைப்பதற்கு அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இதுவரை இரண்டு முறை மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில் மின்வாரியம் சார்பாக இது குறித்த கருத்து தமிழக அரசுக்கு முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் கட்டணம் குறைப்பு குறித்த தகவல் வெளியாகும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி ஒரு யூனிட் 4.60 ரூபாய் என்ற கட்டணத்தில் கட்டணம் குறைப்பு செய்து வசூலிக்கப்படும் என்றும் இது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மின்வாரியத்துடன் ஆலோசித்து அரசு அதற்கான அறிவிப்பை வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.