தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய 150வது திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நிலையில் தி ஸ்மைல் மேன் என்று அந்த திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விமான நிலையத்தில் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் தமிழகத்தில் அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமை குற்றங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் இது போன்ற செயல்களுக்கு தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்தது தான் காரணம் என்றார். மேல் போதை கலாச்சாரங்கள் குறைந்தால் மட்டும்தான் பாலியல் குற்றங்களும் குறையும் என்று கூறினார்.