தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உதவும் வகையில் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கல்வி கற்பது மட்டுமல்லாமல் வேலையற்ற இளைஞர்களும் பயன் பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் வெளிநாடுகளில் படிக்க செல்லும் அரசு பள்ளி மாணவர்களின் முதல் பயணச் செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் உரையாற்றிய முதல்வர், தைவான், மலேசியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் 14 தமிழ்நாடு மாணவர்கள் முழு கல்விச்செலவை இலவசமாக பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் தான் இனி அனைத்து துறைகளிலும் ஆட்சி செலுத்துவார்கள் என்று கூறியுள்ளார்.