தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் இளைஞர்களுக்கு கூடுதலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு என அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம் எனவும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் சுயவிவரத்தை பதிவேற்றம் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.