
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே காரைமேடு சித்தர்புரம் என்ற பகுதி உள்ளது. இங்கு 18 சித்தர்கள் அருள் பாலிக்கும் ஒளிலாயம் சித்தர் பீடம் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். இந்நிலையில் இந்த சித்தர் பீடத்தில் தற்போது ஒரு வெளிநாட்டு ஜோடி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அதன்படி தைவான் நாட்டைச் சேர்ந்த இமிங், சு ஹூவா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே தைவானில் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். மேலும் இந்த திருமணத்தில் கலந்து கொண்ட உறவினர்களும் பட்டு வேஷ்டி மற்றும் சேலையில் கலந்து கொண்டு திருமண ஜோடியை வாழ்த்தினார்.