
தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குடமுழக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. அதன்படி வருகின்ற 23ஆம் தேதி குடமுழக்கு விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 23 உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தின விடுமுறையை ஈடு செய்வதற்கு ஏதுவாக செப்டம்பர் 21 வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.