
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் குருபூஜை மற்றும் நினைவு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் அதனை முன்னிட்டு ஏராளமான மக்கள் அங்கு வருவார்கள். இதன் காரணமாக பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முன்னதாகவே 144 தடை உத்தரவும் பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் ஏராளமான போலீசார் வந்துள்ளதால் அவர்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 82 பள்ளிகளுக்கு நேற்று முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் வெளியிட்டுள்ளார்.