தமிழகத்தில் போலி பத்திரப்பதிவுகளை தடுப்பதற்காகவும் பொதுமக்கள் கூடுதல் வசதியை பெறும் வகையிலும் பத்திரப்பதிவுத்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பத்திரப்பதிவு தொடர்பான அனைத்து சேவைகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன அதே சமயம் பத்திரப்பதிவுக்கான எந்தவித தொகையும் வசூல் செய்யக்கூடாது எனவும் பொதுமக்கள் பத்திரப்பதிவுக்கு வரும்போது கையில் பணம் எடுத்து வர வேண்டிய அவசியம் இல்லை எனவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மேனுவல் முறையில் வழங்கப்பட்ட மனை பட்டாக்கள் தற்போது வரை ஆன்லைன் மயமாக்கப்படாத நிலையில் இலவசமடை பட்டாக்களை பயன்படுத்த முடிவதில்லை. இதனால் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் மனை பட்டாக்களும் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வருவாய் துறைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.