தமிழகத்தில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தகுதி தேர்வு அடிப்படையில் இனி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதாவது சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு குறித்து மதுரை கிளை வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. மேலும் இந்த வழக்குகள் முடிவடைந்து தீர்வு வெளிவந்த பிறகு இது தொடர்பான முறையான அறிவிப்புகள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.