தமிழகத்தில் வெளியிடங்களில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு தூய்மை பாரத இயக்கம் திட்டத்தை அரசு தொடங்கி வைத்தது. இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னையை தவிர அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பொன்னையா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மாவட்ட அளவிலும் வட்டார அளவிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் எனவும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் அனைவருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதர் 35 ஆயிரம் ரூபாய் சம்பளமும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாதம்தோறும் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் இந்த நடைமுறை செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாகவும் மறு உத்தரவு வரும் வரை இதில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.