
தமிழகத்தில் இனி பத்திரப்பதிவின் போது உடனடியாக ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நிமிடப்பட்டா என்ற தானியங்கி பட்டா வழங்கும் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்பு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பத்திரப்பதிவின் போதே பெயர் மாற்றம் செய்யப்படும்.
ஆனால் கிராமப்புறங்களில் நத்தம் என குறிப்பிடப்படும் குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படுவது கிடையாது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு நிமிட பட்டா வழங்கும் முறையை விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி இனி பத்திரப்பதிவு செய்யும்போதே பட்டாவும் உடனடியாக பெயர் மாற்றம் செய்யப்படும். இதற்காக பத்திரப்பதிவு சர்வரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.