தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (5.6.2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சேலம், கருப்பூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் 5 மணி வரை பாரதி நகர், வெள்ளக்கல்பட்டி, கரும்பாலை, பாகல்பட்டி, ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போர்டு, கோட்டகவுண்டம்பட்டி, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், புளியம்பட்டி, கருப்பூர், மேட்டுபதி, புதூர், எட்டிக்குட்டப்பட்டி, மயிலபாளையம், பெரியகரடு, பி.காமலாபுரம், சக்கரசெட்டிப்பட்டி, குள்ளகவுண்டனூர், சங்கீதப்பட்டி, செக்காரப்பட்டி, குள்ளமநாயக்கன்பட்டி, மேலாண்டிபட்டி, அடைக்கனூர், நாரணம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

திருப்பூர்: வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம் பாளையம், எம்.ஏ.நகர், லட்சுமிநகர், சின்னக்கரை, முல்லைநகர், டி.கே.டி.மில், இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதிநகர், ஈடுவாய் கிழக்குப்பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லைநகர், இடும்பன்நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சிநகர், செல்லம்நகர், வஞ்சிப்பாளையம், மகா லட்சுமிநகர், அம்மன்நகர், தாந்தோணியம்மன்நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், லிட்டில் பிளவர்நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

நெல்லை: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைக்கால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் அயன் சிங்கப்பட்டி, மாஞ்சோலை ஆலடியூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மின்விநியோகம் இருக்காது.

கரூர்: மலைக்கோவிலூர், நொய்யல் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கோவிலூர், தடாகோவில், அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புபாளையம், குளத்துபாளையம், காளிபாளையம், நத்தமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.