
தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்னும் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த நான்கு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றும் இந்த நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.