தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போது மக்களுக்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 31, ஜூன் 1ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மே 31ஆம் தேதி 500 பேருந்துகளும், ஜூன் 1ஆம் தேதி 570 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 65 சிறப்பு பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.