தமிழகத்தில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி தாலுகா, மானாமதுரை, திருபுவனம் மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஆஷா வெளியிட்டுள்ளார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 21ஆம் தேதி மேற்கண்ட 4 வட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு இமானுவேல் சேகரனார் குருபூஜையை முன்னிட்டு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.