தென்னிந்திய பகுதிகளின் மேல்நிலைவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உட்பட 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தவரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் இன்று மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் என்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.