
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதாவது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தென் தமிழகம் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தென்காசி, தேனி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.