தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பலத்த கன மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 4:30 மணியளவில் வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இன்று அதிகாலை சென்னையில் லேசாக வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.