தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சமீப காலமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று மாலை முதல் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு புறநகர் பகுதிகளான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் நள்ளிரவு முதல் மழை பொழிகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மழை பெய்து வரும் நிலையிலும் மேற்கண்ட மாவட்டங்களில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் சென்னையில் 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.