தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 28 மிலாடி நபி, செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 சனி ஞாயிறு வழக்கமான வார விடுமுறை மற்றும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி செய்தி என தொடர்ச்சியாக விடுமுறைகள் வருகின்றன. இதனை கருதி வெளியூர்களில் தங்கி பணியாற்றும் பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். சென்னையில் இருந்து வெளியூருக்கு பயணிப்பதற்கு இன்று மட்டும் சுமார் 20000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 40 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்துள்ளதால் பேருந்தில் பயணிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 27 முதல் 30-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து கூடுதலாக 1500 பேருந்துகளை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு திரும்ப கூடுதலாக ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.