
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த நேற்று ஒடிசா மாநிலம் பூரிக்கு அருகே கரையை கடந்தது. இதனால் அந்த பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று நாளை முதல் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்று மற்றும் நாளை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது..