தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ‌ தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இதேப் போன்று 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் மூட்டத்துடன் காணப்படுவதோடு நகரில் ஓரிரு இடங்களில்  மழை பெய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை அறிவித்துள்ளது.