
தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த 67 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதல் கட்டமாக 111 நியாய விலை கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் அது 300 கடைகளாக அதிகரிக்கப்பட்டது.
தற்போது மேலும் 200 நியாய விலை கடைகளில் குறைந்த விலை தக்காளியை விற்பனை செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி இன்று ஆகஸ்ட் 1 முதல் மொத்தம் 500 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 10 முதல் 15 கடைகளில் நபருக்கு ஒரு கிலோ தக்காளி வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.