தமிழகத்தில் ரேஷன் கடை அனைத்து ஊழியர்கள் சங்கமான டாக்பியா சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இருப்பு குறைவிற்கு அபராதத்தை இரு மடங்காக உயர்த்துவது, இயந்திரப் பொழுதுக்கு விற்பனையாளர்களை பொறுப்பாக்குவது போன்றவற்றை கண்டித்து இன்று ஒரு நாள் ரேஷன் பணியாளர்கள் அனைவரும் விடுப்பு எடுத்து அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் இன்று ரேஷன் கடைகள் இயங்குமா என்று மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.