
தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் அய்யர்மலை அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ள நிலையில் அக்டோபர் 28ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் மூன்று மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அக்டோபர் 28ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் எனவும் எதிர் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 28ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் 15000 மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் கலந்து கொள்ளலாம்.