
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதன் பிறகு சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் வழங்கப்படுகிறது.
இதுபோக 85 சதவீத இடங்களில் அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகள் என மொத்தம் 6630 எம்பிபிஎஸ் படிப்புகள் மற்றும் 1ப683 பிடிஎப் படிப்புகள் மாநில அரசு வசம் உள்ளது. இதில் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் 496 எம்பிபிஎஸ் படிப்புகள் மற்றும் 126 பிடிஎஸ் இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மேலும் நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற நாமக்கல் பள்ளி மாணவர் ரஜனீஷ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்