
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் மத்திய அரசு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதோடு பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டு விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு பாகிஸ்தானுக்கு இனி தண்ணீர் தர முடியாது என்று கூறியதோடு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் தற்போது அதன் எதிரொலியாக தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதோடு தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள் விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இவர்கள் நாளைக்குள் வெளியேற்றப்படுவார்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வாகா எல்லையை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.