தமிழகத்தில் உலமாக்கள், பிற பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் சமூகம் மற்றும்  பொருளாதார கல்வி ஆகியவற்றில் முன்னேற்றமடைய கடந்த 2009 ஆம் ஆண்டு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் தொடங்கப்பட்டது. இந்நிலையில்  உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகளை பேரவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார்.

அதன்படி ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். அதனைப் போலவே உ உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியத்தில் பதவி பெற்ற உறுப்பினர்கள் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 20,000 ரூபாயிலிருந்து 30000 ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.