திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் சுக்கு நூறாக உடைந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளி முருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடைய மனைவி கல்யாணி இந்த விபத்தில் உயிரிழந்தார். அதன்பிறகு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிகாலையில் நடந்த இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.