
தமிழகத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை மாதம் தோறும் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதால் அதற்கான பணிகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. தகுதியான குடும்பப் பெண்கள் தேர்வு, வங்கி கணக்கு தொடங்கும் என அடுத்தடுத்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் இன்று மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை பொறுப்பேற்ற உடனே ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.