
டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஆலயம் காப்போம் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்திலுள்ள 38,000 கோவில்களில் பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அதன்பிறகு மறைமுகமாக கோவில் நிதியில் முறைகேடு நடைபெறுகிறது. அவ்வாறு கோவில் நிதியை அறநிலையத்துறைக்கு மாற்றியதை திரும்ப வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் தமிழகத்தில் உள்ள கோவில் உண்டியல் நிதிகளை முறைப்படுத்த ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியது. அதோடு தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் கிடைக்கும் நன்கொடைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இந்த நிதியை கல்வி போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்தினால் தவறு கிடையாது எனவும் அதற்கு பதில் உயர் ரக கார்கள் வாங்குவது போன்ற சொகுசு காரியங்களுக்காக தமிழக அரசு பயன்படுத்தினால் அது மிகவும் தவறு என்றும் கூறியது.