
தமிழ்நாட்டில் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சபாநாயகர் அப்பாவு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதாவது தீப்பெட்டி உற்பத்தி தொழிலை கடுமையாக பாதிக்கும் விதமாக பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனை இருக்கிறது. எனவே இந்த சிகரெட் லைட்டர்களை பயன்படுத்த அரசு தடைவிதித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வற்புறுத்தலின் பேரில் ஒன்றிய அரசு சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதித்தது. இருப்பினும் வட மாநில நிறுவனங்கள் அதன் மூலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து சிகரெட் லைட்டர்கள் தயார் செய்து விற்பனை செய்கிறார்கள். எனவே இந்த பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு தன் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.