
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் கொஞ்சம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 15 நாள்களில் 1,000-திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது எல்லை மாவட்டங்களான குமரி, நெல்லை, ஈரோடு, தேனி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி வழியே தமிழகத்தில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
அதனால், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரிடம் பரிசோதித்து சிகிச்சை பெற சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் டெங்குவை தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.