
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில் கூடுதலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட நாள்காட்டியில் 19 சனிக்கிழமைகள் பள்ளிகள் செயல்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பணி சுமையை குறைக்க வேலை நாட்களை குறைக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்ததால் ஜூலை 13ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறையும், ஆகஸ்ட் 10 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.