
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இந்தப் பண்டிகை ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெறுவதோடு அசைவ உணவை சமைத்து பலருக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.
இந்நிலையில் நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பிறை தென்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் பக்ரீத் பண்டிகை நடைபெறும் தேதியை அறிவித்துள்ளார். மேலும் அதன்படி தமிழகத்தில் வருகின்ற 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.