கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரம் பகுதியில் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதவபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது.

அந்த திருவிழாவிற்கு சென்ற 17 வயது சிறுவனான விஷ்ணு பரத்துக்கும், ஆட்டோ ஓட்டுனரான சந்துரு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கஞ்சா போதையில் இருந்த சந்துரு கோபத்தில் விஷ்ணுபரத்தை குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 17 வயது சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய சந்துருவை கூடங்குளத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.