தமிழகத்தில் மக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் காரணமாக புதிய ரேஷன் கார்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் தற்போது மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 3.1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதில் 2.8 லட்சம் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்டு இந்த மாதம் முதல் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.