தமிழகத்தில் ப்ளட் ஆர்ட் வரைய தடை செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்பு சாவடி நகர்புற வாழ்வு மையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் 10-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அன்ன பிளவு, உதடு பிளவு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களின் பாராட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது அமைச்சர் கூறியதாவது, ரத்தத்தை கொண்டு ஓவியம் வரைந்து காதலர்களுக்கு பரிசளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ரத்தத்தை வைத்து ஓவியம் வரையும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.