தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு தகுதியான பயனாளியின் வாய்ப்பும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின்படி அரசு மிக கவனமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தகுதியானவர்கள் இ சேவை மையங்கள் மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என்றும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் தீர்வு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.