தமிழகத்தில் மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியை வேலூர் பள்ளிகொண்டாவில் நடக்கும் திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். முதல்வரின் கள செயல்பாடுகள் மற்றும் மக்களுக்கும் நாட்டுக்கும் திமுக என்ன செய்தது என்பதை பற்றி இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.