
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் மோகனூரைச் சேர்ந்த செல்வமணி என்பவர் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி செல்வமணி பரிதாபமாக உயிரிழந்தார். சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற பக்தர் மூச்சு திணறி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது பழனி முருகன் கோவிலுக்கு சென்ற பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.