
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவத்தின் தாக்கமே அடங்காத நிலையில் சமீபத்தில் 17 வயது மாணவி ஒருவர் கன்னியாகுமரியில் கடத்தப்பட்டு வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஈரோடு மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பைக்கில் ஆள் நடமாட்டம் இல்லாத இனத்திற்கு வாலிபர் ஒருவர் மாணவனை அழைத்து சென்று பாலியல் அத்திமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.